Monday 22 August 2011

மின்னி மறைந்த எங்கள் செல்லச் சுடரே!




மின்னி மறைந்த
எங்கள் செல்லச் சுடரே!


வெகு சீக்கிரம் அழுது விடுவாய்
வெகு சீக்கிரம் சிரித்தும் விடுவாய்
இப்படி வெகு சீக்கிரம் மறைந்தும் விட்டாயே


அன்பின் கருவென பூத்து
அழகின் உருவென மணந்து
அதிர்ச்சி தரும்படி உதிர்ந்த
அர்ஷத் மலரே!




அர்ச்சனைக்குரிய அழுகுப் பூ என்பதால்தானா
இறைவன் உன்னை
இவ்வளவு விரைவில் எடுத்துக்கொண்டான்?




நீ வரும் பேருந்துக்காக
நாங்கள் எல்லோரும் காத்திருப்போம்
செம்மண் பாதையில் புழுதி கிளம்ப
ஓடிவருவாய் எங்களை நோக்கி
ஆனால் இன்றைக்கோ
பேருந்துகள் எல்லாம் சென்றபடி உள்ளன
நாங்கள் எல்லோரும் காத்திருக்கிறோம்
ஐயோ கண்ணே!..
எங்களை நோக்கி ஓடிவர வேண்டிய நீ
இப்படி மரணத்தை நோக்கி ஓடிவிட்டாயே...!




நீ மட்டும் விளையாடியிருந்தால்
எதுவும் பிரச்சனை இல்லை
ஆனால்
அருமை சொந்தமே!
கூடவே சேர்ந்து
விதியும் அல்லவா விளையாடிவிட்டது?




எங்கள் உதடுகள்
உன் பெயரை
உச்சரித்துக் கொண்டே இருக்கும்
எங்கள் நெஞ்சங்கள்
உன் நினைவை ஏந்திக் கொண்டே இருக்கும்




தினந்தோறும் உன்னை
நினைத்துக் கொள்கிறோம் செல்லமே
நினைவுகளால் ஆன ஓர் ஆலயத்தில்
உன்னை நிரந்திரமாய் குடிவைத்திருக்கிறோம்






எங்கள் வானத்தில் நட்சத்திரமாய்
நீயே சுடர்கிறாய்
எங்கள் சுவாசத்தில் பிராணமாய்
நீயே படர்கிறாய்
எங்கள் வயல்களில் தளிராய் நீயே துளிர்ப்பாய்
எங்கள் வாழ்வின் தீபமாய் நீயே ஒளிர்வாய்


                                     

No comments:

Post a Comment